சினிமாவை மையமாக வைத்து எடுப்பட்டுள்ள ஒரு சினிமாக்கதை
ஹீரோ உதய்கார்த்திக் இயக்குநராக வேண்டும் என்ற வேட்கையோடு இருக்கிறார். அவர் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்கிறார். அவரின் கதை திருடப்படுகிறது..இல்லை அபகரிக்கப்படுகிறது. அதனால் உதய் மனமுடைய, அவரின் இரு அண்ணன்கள் தயாரிப்பாளர்களாக மாறுகிறார்கள். மேலும் மொத்தக் குடும்பமும் உதயின் வெற்றிக்கு உதவுகிறது. அடுத்து என்ன? சுபமான முடிவு
கதைக்குப் பொருத்தமான நடிகர்களை தேர்ந்தெடுத்ததில் இயக்குநர் வெற்றிபெற்றுள்ளார். கதைக்குத் தேவையான நடிப்பைக் கொடுத்த வகையில் ஹீரோ உள்பட அனைவருமே வெற்றி பெற்றுள்ளனர். உதய் கார்த்திக் ஒரு இடத்தில் ஸ்கோர் செய்தால், அடுத்தக்காட்சியிலே விவேக் பிரசன்னா ஸ்கோர் செய்கிறார். இப்படியாக படத்தில் நடித்துள்ள அனைவருமே தங்களது பங்களிப்பை மிகச்சிறப்பாக கொடுத்துள்ளனர்.
பின்னணி இசையை தெளிவான பார்வையோடு அமைத்துள்ளார் இசை அமைப்பாளர்.
ஒளிப்பதிவாளர் தனது பெஸ்ட்-ஆன உழைப்பைக் கொடுத்து அசத்தியுள்ளார்.
சினிமாவில் நல்ல கதை அல்ல விசயம். சிறந்த திரைக்கதையே விசயம். அந்த வகையில் மிகச்சிறப்பான திரைக்கதையை கையாண்டுள்ளார் இயக்குநர். சொந்த வாழ்வின் கதை என்பதாலோ என்னவோ, நிறைய இடங்கள் உணர்வுப்பூர்வமாக வொர்க்கவுட் ஆகியுள்ளது. ‘சிலபல வெற்று ட்ரமாக்களைத் தவிர்த்திருக்கலாம்’ என்ற விமர்சனத்தை நம் மனம் முன் வைக்க முனைந்தாலும், முழுமையாக படம் மனதை நிறைவாக்கி விடுவதால், ட்ராமா என்ற சிறுகுறை தெரியவில்லை
3/5
-வெண்பா தமிழ்