யூ-டியூப் சேனல்களின் வளர்ச்சியில் கவனிக்கத்தக்க குழு எருமச்சாணி குழு. தற்போது இந்த சேனல் வெஃப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறது.இதில் முக்கிய பொறுப்பு வகிப்பவர் விஜய் ராஜேந்திரன். இவருக்கு தற்போது அருள்நிதியை இயக்கும் வாய்ப்பு கனிந்து வந்திருக்கிறது. தனது கல்லூரி காலத்தின் பின்னணியில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை
மையப்படுத்தி ஒரு சுவாரஸ்யமான லைனை விஜய் அருள்நிதியிடம் கூற உடனே அவர் அதற்கு ஓகே சொல்லிவ்ட்டாராம். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. தற்போது ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில் ஜூவாவுடன் இணைந்து களத்தில் சந்திப்போம் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் அருள்நிதி.