Tamil Movie Ads News and Videos Portal

அஷ்வின் நடிக்கும் “என்ன சொல்ல போகிறாய்”!

தென்னிந்தியாவின் மதிப்பிற்குரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான Trident Arts R ரவீந்திரன், சமீபத்தில் தமிழ் மக்களின் நெஞ்சங்களை கொள்ளைகொண்ட, திறமைமிக்க, அழகான நடிகரான அஷ்வின்குமார்யை ஹீரோவாக, அவருடைய அடுத்த தயாரிப்பான “என்ன சொல்ல போகிறாய்” படத்தில் அறிமுகபடுத்துகிறார். இப்படம் நேற்று காலை எளிமையான பூஜையுடன் சென்னையில் துவங்கியது. இப்படத்தை இயக்குநர் ஹரிஹரன் A இயக்குகிறார். Trident Arts சார்பில் ரவீந்திரன் தயாரிக்கிறார். தற்போதைய சிக்கலான மருத்துவ சூழலில், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக கடைப்பிடிக்கப்பட்டு இப்பூஜை நடைபெற்றது. அதுமட்டுமல்லாது, இப்பூஜை நேரடி ஒளிபரப்பாக, இணையதளத்தில் வெளியானது, ஒரு திரைப்பட பூஜை நேரடியாக இணையத்தில் வெளியாவது இது தான் முதல்முறை. “ என்ன சொல்ல போகிறாய் “ படத்தின் படப்பிடிப்பு, இந்த மாத இறுதியில் துவங்கபடவுள்ளது.