Tamil Movie Ads News and Videos Portal

எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா?

நிலா ப்ரமோட்டர்ஸ் , TN75 K K கிரியேஷன்ஸ் , ஆர்ட்ஸ் லைன், துரை சுதாகர், திருமுருகன், இணைந்து தயாரிக்கும் படம் “எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா” கல்லூரி “அகில்” சதுரங்க வேட்டை “இஷாரா நாயர்” “யோகி பாபு” “மொட்டை ராஜேந்திரன்” “மனோபாலா” “சூப்பர் சுப்பராயன்” “கௌசல்யா” மற்றும் விஜய் டிவி நட்சத்திரங்கள் சன் டிவி பிரபலங்கள் நடித்துள்ள இப்படம் வரும் மார்ச் 26 முதல் உலகமெங்கும் திரைக்கு வர விருக்கிறது.

கிராமத்தில் இருந்து சாதிக்க வேண்டும் என்று சென்னை கிளம்பி வரும் இளைஞன் தன்னுடைய முயற்சி தோல்வி அடைவதால் மீண்டும் தன் கிராமத்துக்கே சென்று மன தொய்வடையும் போது தன்னை பெரிதும் நம்பும் நடிகர் மொட்டை ராஜேந்திரன் அவருடைய உதவியுடன் மீண்டும் சென்னைக்கு வந்த யோகி பாபுவுடன் இணைந்து ஜெயித்தாரா இல்லையா என்பதுதான் மீதி கதை..