‘96’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனையடுத்து ஃபேமிலி மேன் 2 என்கின்ற வெஃப் சீரிஸில் நடிக்கத் தொடங்கியிருக்கும் சமந்தா, தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்கின்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இருவரோடு இணைந்து நடிக்கவுள்ளார் சமந்தா.
சென்ற வாரம் ஹைதராபாத் நகரில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் சிறுவர்களுக்கான ஒரு பள்ளியை சர்வதேச தரத்தில் தொடங்கியுள்ளார் சமந்தா. இந்தப் பள்ளியின் திறப்பு விழாவில் கலந்து கொண்டவர்கள், அங்கு சிறுவர்களோடு விளையாடிக் கொண்டு இருந்த சமந்தாவிடம் எதார்த்தமாக ’இப்படி உங்களது குழந்தையோடு எப்போது விளையாடப் போகிறீர்கள்..? என்று கேட்டிருக்கிறார்கள். இந்தக் கேள்வியை எதிர்பாராத சமந்தா நிகழ்வு முழுக்க அந்தக் கேள்வியைக் கேட்டவர்களை தவிர்த்திருக்கிறார்.