எனக்கு கிடைத்த வாய்ப்பு என் அப்பாவிற்கு கிடைத்திருந்தால்..
நேற்று சென்னை நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ஆதித்யவர்மா சக்ஸஸ் மீட்டில் நடிகர் துருவ் விக்ரம் பேசியதாவது,
“இப்பலாம் என்கிட்ட யாரும் பிரஸ்மீட் இருக்குன்னு சொல்றதே இல்லை. திடீர்னு காலையில எழுப்பி பிரஸ்மீட்னு சொல்றாங்க. படத்திற்கான ரெஸ்பான்ஸைப் பத்தி கேள்விப்படும் போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதற்காகத் தான் இரண்டு வருடம் காத்திருந்தோம் என்பதை நினைத்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. என் கலை மாமா கதிர்மாமா அவர்களுக்கு பெரிய நன்றி. என்னைச் சின்னப்பிள்ளையில் இருந்தே அவர்கள் பார்த்திருக்கிறார்கள். இசை அமைப்பாளர் உழைப்பு மிகப்பெரியது. கிரியாசா சார் வெரி ஹார்ட் ஒர்க்கர். தனுஷ் முன்னாடி எப்படி நடிக்கிறது என்ற பயம் எனக்கு இருந்தது. ஏன் என்றால் அவன் பாலிலிவுட்ல கேமரா வொர்க் பண்ணவன். சவுரியா நல்ல உழைப்பாளி. என் அப்பா என் ஜிம் ட்ரைனரிடம் கூட படத்தைக் காட்டுவார். ஆனால் என்னிடம் காட்ட மாட்டார். எல்லாவற்றையும் எனக்கு சர்ப்ரைஸாக செய்வார். அன்புதாசன் படத்தோட ஸ்ட்ராங் கேரக்டர். அவன் ரொம்ப நல்லா நடிச்சிருக்கான். அப்பாவும் இந்தப்படத்தில் டயலாக் எழுதி இருக்கிறார். உதவி இயக்குநர்கள் கொடுக்குற எபெக்ட் தான் படமே. அவர்கள் அனைவருக்கும் நன்றி. மேலும் படத்தில் உழைத்த அத்தனை டெக்னிஷியன்களுக்கும் நன்றி. நான் நல்லா நடித்த காட்சிகளில் எல்லாம் என் அப்பா இருப்பார். நான் சுமாராக நடித்த காட்சிகளில் தான் நான் இருப்பேன். நான் பிறந்ததில் இருந்தே எனக்கு சினிமான்னா பிடிக்கும். அதைப்போல் எனக்கு அப்பான்னா ரொம்ப பிடிக்கும். இந்த இடத்தில் நான் நிக்கிறது, நான் நடிக்கிறது எல்லாமே என் அப்பா தான். இந்த வெற்றிக்கான க்ரிடிட் எல்லாமே என் அப்பாவிற்குத் தான் சேரும். இந்த வயதில் எனக்கு கிடைத்த ஆபர் என் அப்பாவிற்கு கிடைத்திருந்தால் அவர் வேறலெவல்ல இருந்திருப்பார். தயாரிப்பாளர் முகேஷ் சார் இப்படியொரு வாய்ப்பைத் தந்துள்ளார். அவருக்கு மிக்க நன்றி” என்றார்