திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தனது பழிவாங்கும் படலத்தைத் துவங்கிவிட்டதாக அதிமுக-வினர் சொல்கிறார்கள். விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற ரெய்டு நமது வீட்டிற்கும் விரைவில் வரலாம் என பல முன்னாள் அமைச்சர்கள் ஆதங்கத்தில் இருக்கிறார்களாம். இவற்றை எல்லாம் மனதில் வைத்த அதிமுக-வின் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி விசிட் அடித்துள்ளார். அங்கு பிரமதரைச் சந்தித்த அவர் தி.மு.கவின் ரெய்டு அஸ்திரங்களைப் பற்றியும் புகார் சொல்லிருக்க கூடும் என்கிறார்கள். ஆக எடப்பாடி ஸ்டாலினுக்கு எதிராக ஓர் அஸ்திரத்தை எடுத்துள்ளார்.