‘சாட்டை’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நடிகை மகிமா நம்பியார் அதனைத் தொடர்ந்து குற்றம் 23, இரவுக்கு ஆயிரம் கண்கள், மகாமுனி என பல படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த வைரஸ் தாக்கத்தால் கட்டயாமாக மாறிவிட்ட விடுமுறையை ஒவ்வொரு பிரபலங்களும் ஒவ்வொரு விதத்தில் பயனுள்ள பொழுதாக மாற்றி வருகிறார்கள். அந்த வகையில் மகிமா நம்பியா சிறு வயதில் தனக்கு ஓவியம் வரைவதில் இருக்கும் ஆர்வத்தின் மீது தன் கவனத்தை திருப்பியிருக்கிறார். தன் வீட்டுச் சுவற்றில் தான் பென்சில் கொண்டு வரைந்த ஓவியங்களை வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் அவர், அதில், “எனக்குள் இருந்த பிகாசோவை மீண்டும் கொண்டு வர இந்த விடுமுறை உதவியது. உங்களுக்குள் இருக்கும் திறமையை வெளியே கொண்டு வாருங்கள். ஓவியம் வரைய உங்களுக்கு தேவையானதெல்லாம், ஒரு சுவர், பென்சில் மற்றும் நீங்கள் கிறுக்குவதை கண்டு கொள்ளாத அம்மா மட்டுமே’ என்று பதிவிட்டுள்ளார்.