Tamil Movie Ads News and Videos Portal

”ஆர்வக்கோளாறால் அப்படி செய்துவிட்டேன், மன்னிக்கவும்” – நடிகர் விளக்கம்

கன்னடத் திரையுலகில் எப்பொழுதும் ஏதாவது ஒரு பிரச்சனையில் அடிபடும் நடிகரின் பெயர் என்றால் அது துனியா விஜய் பெயர் தான். குடும்ப விவகாரம் தொடர்பான பிரச்சனை, தயாரிப்பாளர்களுடன் மோதல் என்று எப்பொழுதும் பரபரப்புக்கு பெயர் போனவரான துனியா விஜய் தற்போது மீண்டும் ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளார். சில தினங்களுக்கு

முன்னர் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய அவர், ரவுடிகள் ஸ்டைலில் நீண்ட வாளால் பிறந்தநாள் கேக்கை வெட்டியிருக்கிறார். இந்த வீடியோ வெளியானதால் அதிர்ச்சியடைந்த பெங்களூரு போலீஸார், இதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றனர். அதற்கு துனியா விஜய் “ஏதோவொரு ஆர்வக் கோளாறில் அவ்வாறு செய்துவிட்டேன். மன்னிக்கவும்” என்று கூறி இருக்கிறார் துனியா விஜய்.