Tamil Movie Ads News and Videos Portal

நடன மாஸ்டர் இயக்கத்தில் துல்கர் சல்மான்

- Advertisement -

மலையாளத்தில் தனக்கான நிலையான இடத்தைப் பிடித்ததைப் போல் தமிழிலும் தனக்கொரு நிலையான இடத்தைப் பிடிக்கப் போராடி வரும் துல்கர் சல்மான், தற்போது புதிதாக ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாகவும் அதில் காஜல் அகர்வால் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

தற்போது இப்படத்தை இயக்கவிருப்பது நடன மாஸ்டர் பிருந்தா என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது. நடன இயக்குநர்கள் கலா, கிரிஜா ஆகியோரின் சகோதரியான பிருந்தா பாரம்பரிய நடன குடும்பத்தைச் சேர்ந்தவர். 100க்கும் அதிகமான படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியிருக்கும் பிருந்தா இயக்கவிருக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகவிருக்கிறது.

- Advertisement -

Get real time updates directly on you device, subscribe now.