துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் புதிய திரைப்படம் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”. கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு முன்னர் படப்பிடிப்பு முடிந்தும் வெகு காலம் கழித்து வெளியான இந்தத் திரைப்படம் யாரும் எதிர்பாராத நிலையில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் இதன் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசிய கெளதம் மேனன், “இந்த வெற்றி சரியான தருணம், இப்படத்தின் ஹிந்தி ரீமேக் மூலம் துல்கர் பாலிவுட்டுக்கு செல்லலாம்” என்று தான் பேசும் போது கூறினார். அதற்கு பதிலளிப்பது போல் பேசிய துல்கர், “இப்படத்தின் ரியல் ஹீரோ நீங்கள் தான். இப்படத்தில் நடிக்க சம்மதித்ததற்கு நன்றி. கண்டிப்பாக நான் உங்களுடன் ஒரு படத்தில் பணிபுரிய விரும்புகிறேன். ஆனால் அது கண்டிப்பாக ரீமேக் படமாக இருக்காது.” என்று தெரிவித்துள்ளார்.