மீண்டும் ஜெமினிகணேஷன் வேடத்தில் துல்கர் சல்மான்
சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். அப்படத்தில் ஜெமினி கணேஷன் வேடத்தில் துல்கர் சல்மான் நடித்திருந்தார். அவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. தற்போது மீண்டும் ஜெமினி கணேஷன் வேடத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு துல்கர் சல்மானுக்கு அமைந்துள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கணா ரனாவத் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவாகவும் அரவிந்த்சாமி மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஆகவும் நடிக்கிறார்கள். இப்படத்தில் ஜெமினி கணேஷன் கதாபாத்திரமும் வலுவான கதாபாத்திரமாக உருவாக்கப்படுகிறதாம். அதிலும் ஜெமினியாக துல்கர் சல்மானே நடிக்கவிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சசிகலா வேடத்தில் நடிகை ப்ரியாமணி நடிக்கவிருக்கிறார் என்று கூறப்பட்டாலும் இன்னும் இந்த இரண்டு தகவல்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.