தெலுங்கில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ படம் மற்றும் அதன் பாடல்கள் மூலம் அதிகமான ரசிகர்களைப் பெற்ற நாயகியாக மாறியவர் ராஷ்மிகா மந்தனா. அப்படத்தைத் தொடர்ந்து, ‘மை டியர் காம்ரேட்’ படத்தில் மீண்டும் விஜய்தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்திருந்தார்.
தற்போது முதன்முறையாக பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தியோடு “சுல்தான்” படத்தில் சேர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில், “பிரபாஸ் மற்றும் நாக சைத்தன்யா இருவரின் ரசிகை நான். அவர்களின் ஒவ்வொரு அசைவையும் வியந்து பார்த்து மகிழ்பவள்; அந்த வகையில் எப்பொழுது இவர்களோடு டூயட் பாடுவேன்.. என்ற ஆசை என் அடிமனதில் இருக்கிறது..” என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.