Tamil Movie Ads News and Videos Portal

DSP- விமர்சனம்

 

80-களில் பல ஹீரோக்கள் வில்லன்களை அடித்த அடியை..கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே அடித்தால்..அதுதான் DSP

ஊருன்னா ஒரு நல்ல குடும்பம் இருக்கும். ஒரு நல்ல குடும்பம் இருந்தா அந்த ஊருக்குள்ள அவங்களை டச் பண்றதுக்குன்னே கெட்டவன் ஒருத்தன் இருப்பான். அவன் டச் பண்ணும் போது நல்ல குடும்பம் தடுமாறும்..அதனால அந்த நல்ல குடும்பத்துல இருக்குற ஹீரோ தடம் மாறுவார். தடம் மாறிய ஹீரோ, “எங்க கண்ணாடி கூட்டை உடைச்சிட்டியேடா”னு சொல்லி…லாஸ்ட்ல வில்லனோட தாடையை உடைப்பார். அவ்ளோ தான் சுபம்னு end கார்ட் போடுவாங்க.. இதையெல்லாம் ஒரு சாதாரண டெண்டு கொட்டாய்ல பத்துரூபா கொடுத்துட்டு மண்தரையில படுத்துக்கிடந்து பார்த்தா ஓரளவு பிடிக்கும்.. பிடிக்கலன்னா கூட காலை விரித்து தூங்கும் வசதி கிடைக்கும். அந்தக் கொடுப்பணை DSP- பார்ப்பவர்களுக்கு இல்லை

நடிப்பதை விட நடப்பதையே அதிகம் விரும்பியிருக்கிறார் விசே. பொன்ராமும் அதுபோதும்னு முடிவெடுத்துட்டார் போல. ஹீரோயின் எனச்சொல்லி அறிமுகமாகியுள்ள பெண் நல்ல தேர்வு!! கதையில் எக்ஸ்ட்ராவா எதுவுமே இல்லை என்பதால் தன் நடிப்பை எக்ஸ்ட்ராவா வழங்கியுள்ளார். அவரும் நம்மைச் சோதிக்கத் தவறவில்லை! காமெடியெனச் சொல்லி குக்வித் கோமாளி புகழ் செய்யும் கோமாளித் தனங்கள் கொட்டாவியை வர வைக்கும் ரகங்கள். கொட்டாவி வந்தால் அது தூக்கத்தின் குறியீடு என்பதை உணர்ந்த டி. இமானும் எல்லா இன்ஸ்ட்ரூமெண்ட்களையும் கலந்து அடியோ அடியென அடித்து நம்மை மிரள வைக்கிறார்..

படம் துவங்கி Just 40-ஆம் நிமிடத்தில் கதையைத் துவங்கும் பொன்ராம் படம் முடியும் தருவாயில் … ஒரு குறியீட்டு காட்சியை வைத்துள்ளார்.

ஹீரோவும் வில்லனும் முரட்டுத்தனமாக சண்டையிட்டுக்கொள்வார்கள். படத்தை விட கொடூரமான இப்படியான வில்லனை விசே அழித்தே தீரவேண்டும் என நாம் நினைக்கும் போது, திடீரென வில்லன் ஹீரோவிடம் ஒரு டீ சாப்பிடலாமா? என்பார். உடனே ஹீரோவும் ஓ யெஸ் என்பார். டீ குடித்தபின் மீண்டும் சண்டையிடுவார்கள்.. (அடங்கப்பா கிரியேட்டிவிட்டி)

இதிலென்ன குறியீடு?

படத்துல நடிச்சே அவங்களே டயர்ட் ஆகி டீ குடிக்கும் போது…..🏃‍♂️🏃‍♂️

2/5
-மு.ஜெகன் கவிராஜ்