திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வரும் நடிகை சமந்தா தனது கனவு நாளை நனவாக இருப்பதாக தெரிவித்துள்ளார். நடித்துக் கொண்டே பல சமூகம் சார்ந்த தொண்டு நிகழ்வுகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார் நடிகை சமந்தா.
அதில் ஒன்றாக ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதிகளில் பிரதியுக்ஷா என்கின்ற தன்னார்வத் தொண்டு அமைப்பின் மூலம் ஒரு கல்விக்கூடத்தை தொடங்கி அதன் மூலம் பலருக்கும் தரமான கல்வி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று எண்ணி வந்தார். இதற்கான வேலைகள் கடந்த ஒராண்டு காலமாகவே நடந்து வரும் நிலையில், தற்போது ஷில்பா ஷெட்டி, முக்தா குரோனா ஆகியோருடன் இணைந்து இந்தப் பணியை நிறைவு செய்திருக்கிறார். இப்பள்ளியின் துவக்க விழா நாளை நடக்கவிருக்கிறது.