Tamil Movie Ads News and Videos Portal

‘டபுள் ஐஸ்மார்ட்’படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இருவரும் தங்களது வெற்றிப் படமான ‘ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் சீக்வலான ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளோடு மும்பையில் தொடங்கியது. பூரி கனெக்ட்ஸ் பேனரின் கீழ் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் தயாரிக்கும் இந்தப் படத்திற்காக ராம் ஸ்டைலான மேக் ஓவரில் மாறியுள்ளார். விசு ரெட்டி தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

படத்தின் அடுத்த பெரிய அப்டேட்டாக சஞ்சய் தத் படத்தில் நடிக்க இருப்பதை படக்குழு அறிவித்துள்ளது. ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முழுநீள கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முதல் ஷெட்யூலிலேயே இணைந்துள்ள சஞ்சய் தத்தின் கதாபாத்திரத்தை ‘பிக் புல்’ என அறிமுகப்படுத்தி முதல் பார்வை போஸ்டரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளனர்.

ஃபங்கியான தலைமுடி மற்றும் தாடி, காதணிகள், மோதிரங்கள், விலையுயர்ந்த வாட்ச், முகம் மற்றும் விரல்களில் டாட்டூ என மிகவும் ஸ்டைலிஷாகவும் அதே நேரத்தில் கடுமையான தோற்றத்திலும் சஞ்சய் தத் சிகரெட் பிடித்துக் கொண்டு இந்த போஸ்டரில் உள்ளார். துப்பாக்கிகள் அனைத்தும் அவரை நோக்கிக் காட்டப்பட்டிருந்தாலும் சஞ்சய் தத்தின் பயமில்லாத இந்த தோற்றம் படத்தில் அவர் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதைக் காட்டுகிறது.தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் மகா சிவராத்திரியான மார்ச் 8, 2024 அன்று ’டபுள் ஐஸ்மார்ட்’ படம் வெளியிடப்படும்.