ஒட்டுமொத்த உலகத்தையும் தன் கட்டுக்குள் வைத்து மிரட்டி வருகிறது கொரோனா எனும் கொடிய வைரஸ். அது ஏற்படுத்தி வரும் தாக்கத்தால் பொருளாதாரம் வாழ்வாதாரம் எல்லாம் சரமாறியாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மனித நேயத்தால் வறுமை போன்றவற்றை கடக்க வேண்டிய மக்களில் பெரும்பாலோனோர் மனிதநேயமற்ற செயலை செய்து வருகிறார்கள்.
இரு தினங்களுக்கு முன்பு இறந்து போன சைமன் என்ற மருத்துவரை புதைக்க விடாமல் மக்கள் செய்ததெல்லாம் மிகப்பெரிய அநீதி! இதுபோன்ற செயல்கள் நிச்சயம் இனி தவிர்க்கப்பட வேண்டும். இந்நோயை வென்றெடுப்பதற்கான கருவிகள் ஆயிரம் தேவைப்படலாம். அவற்றில் முதல்தேவை மனிதநேயம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்