ஒரு கெத்தான டாக்டர் சில வெத்து ஆட்களை வைத்து பெரிய கடத்தல் மாஃபியாவை எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதே டாக்டர் படத்தின் ஒன்லைன்
ஆர்மி டாக்டராகவும், எதையும் பிராக்டிகலாகப் பார்ப்பவராகவும் மிகவும் நேர்மையானவராகவும் இருக்கும் சிவகார்த்தியன் இப்படத்தில் காட்டியிருப்பது மாஸ் பெர்ஃபாமன்ஸ். மாஸ் என்றால் பத்துப்பேரை அடிக்கும் மாஸ் அல்ல. பெரிய பெரிய விசயங்களை தன் கேரக்டரேசன் மாறாமல் ரியாக்ட் பண்ணி முடிக்கும் மாஸ். சிவகார்த்திகேயனின் செட்டில்டான நடிப்பு படத்திற்கு ரொம்பவே கை கொடுத்துள்ளது. படத்தில் அவருக்கு அடுத்து குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவர்கள் ரெடின் கிங்ஸ்ட்லியும் யோகிபாபாவும். படம் நெடுக மிரட்டி இருக்கிறார்கள். பிரியாங்கா அருள்மோகன் அழகாக இருக்கிறார். சில காட்சிகளில் அவரும் சிரிப்பு மூட்டுகிறார். ஆங்கர் அர்ச்சனா பாசமான அம்மாவாக கவனிக்க வைக்கிறார். வில்லனாக வினய் நன்றாக நடித்திருந்தாலும் அவர் கேரக்டர் ஸ்கெட்ச் லேசாக தடுமாறி இருப்பதால் கொஞ்சமே கொஞ்சம் வீக்-ஆக இருக்கிறார்
படத்தின் குவாலிட்டி எந்த இடத்திலும் குறையாத அளவிற்கு மேக்கிங்கில் அசத்தி இருக்கிறார் நெல்சன். அனிருத்தின் பின்னணி இசை டாக்டருக்கான பக்கா ட்ரீட்மென்ட். டிக்டாக் பாட்டு படம் முடிந்த பிறகுதான் வருகிறது. அது பொருத்தமாகவே இருக்கிறது.
முன்பாதியில் இருந்த புத்திசாலித்தனமான திரைக்கதை பின்பாதியில் சறுக்கினாலும் டாக்டர் டீமின் காமெடி அதைச் சரிசெய்து விடுகிறது…அம்மாம் பெரிய வில்லன் ஒரு சின்ன விசயத்திற்காக சிவாவிடம் சரணாகதி அடைவது தான் நம்புவது போலில்லை. கண்ணுக்குத் தெரியும்படியான லாஜிக் குறைகள் இருந்தாலும் காமெடி என்ற மேஜிக் அத்தனையையும் மறக்க வைத்து ரசிக்க வைக்கிறது..
டாக்டர்- வொர்த் ட்ரீட்மென்ட்
-மு.ஜெகன் கவிராஜ்