Tamil Movie Ads News and Videos Portal

தனிப்பட்ட முறையில் நிவாரணம் செய்யாதே! அறிவிப்புக்கு காரணம் நம் நடிகர்களா?

கொரோனா ஊரடங்கால் வேலையின்றி வறுமையில் வாடத் துவங்கியுள்ளார்கள் மக்கள். அரசு எல்லாவிதமான முன்னேற்பாடுகளை திறம்பட செய்தாலும் தன்னார்வளர்களும் அரசோடு இணைந்தால் இந்தக் கொரோனா எனும் கொடிய பிடியில் இருந்து வெளிவர முடியும். அதை உணர்ந்து பல தன்னார்வலர்களும் பிரபலங்களும் மக்களுக்குத் தனிப்பட்ட முறையில் தங்களால் ஆன உதவிகளைச் செய்து வருகிறார்கள். திடீரென்று நேற்று அரசுத்தரப்பில் தனிப்பட்ட முறையில் யாரும் மக்களுக்கு உதவக்கூடாது. அதன் மூலம் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஒரு அறிக்கை வெளியிட்டிக்கிருக்கிறது. இதற்கு மு.க ஸ்டாலின் கமல் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அரசின் இந்த முடிவுக்குக் காரணம் நம்மூர் நடிகர்களாக இருக்கலாம் என்று சிலர் கருதுகிறார்கள். அதாவது மக்களுக்கு நேரடியாக உதவி செய்வதின் மூலம் அந்த நடிகர்கள் தன் சுய விளம்பரத்தைப் பெருக்கிக் கொள்கிறார்கள் என்று கருதுகிறதாம் அரசு. அடப்பாவத்த!

இந்த விவகாரம் வெடித்தப் பிறகு தற்போது அரசு கீழ்கண்ட விசயங்களைச் சொல்லிப் பின் வாங்கியுள்ளது..


தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் உணவு வழங்க தடை இல்லை

தமிழக அரசு விளக்கம்

சூழ்நிலைக்கு ஏற்ப உரிய வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது

யாருக்கும் தடை விதிக்கவில்லை- தமிழக அரசு

ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்கு தடை விதித்தது போல் சித்தரிக்கப்படுகிறது

அரசு எந்தவித அரசியலும் செய்யவில்லை எனவும் விளக்கம்

இதை மாதிரி எப்படியெல்லாம் உதவணும்னு சொல்லிக்கொடுங்க பாஸ்..உதவவே கூடாது என்பது எவ்வகை நியாயம்?