இயக்குநர் ஹரி கமர்சியல் படங்களின் மாஸ் அடையாளம். அவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ‘சிங்க’வேட்டை நடத்தியெல்லாம் பெரும் வரலாறு. மேலும் நடிகர் சூர்யாவிற்கு வியாபார ரீதியான அந்தஸ்த்தை உயர்த்தியது ஹரியின் படங்கள் தான். இதை ஒருமுறை சூர்யாவும் குறிப்பிட்டுள்ளார். கதையே இல்லாமல் ஷுட்டிங் போகும் சில இயக்குநர்களுக்கு மத்தியில், ஒரு சின்ன செட் ப்ராபர்ட்டி முதற்கொண்டு சரியாக இருக்கிறதா? எனப்பார்த்துப் பார்த்து ப்ளான் போடுவதில் இந்த அருவா இயக்குநர் கில்லாடி.
தற்போது அவர் நடிகர் சூர்யாவை வைத்து ‘அருவா’ என்ற படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில் கொரோனாவால் திரையுலகம் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து இயக்குநர் ஹரி தயாரிப்பாளரின் நலன் கருதி அருவா படத்தில் தனது சம்பளத்தில் இருந்து 25% பணத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார். இதை எல்லா பெரிய இயக்குநர்களும் பெரிய இயக்குநர்களும் செய்தால் நல்லாருக்கும்! செய்வீர்களா?