Tamil Movie Ads News and Videos Portal

தமிழக அரசுக்கு திவ்யா சத்யராஜ் நன்றி

ஊட்டசத்து நிபுணர் திவ்யா சத்யராஜ் அட்சயப்பாத்திரம் அமைப்பின் விளம்பரத் தூதராக உள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

“அட்சய பாத்திரா அமைப்பு உலகப் புகழ்பெற்ற மதிய உணவுத் திட்டம் ஆகும். இதற்கு ஏற்கெனவே நகருக்கு வெளியே ஒரு உணவுத் தயாரிப்புக் கூடம் உள்ளது. நகருக்குள் ஒரு உணவு தயாரிப்புக் கூடம் இருந்தால் வசதியாக இருக்கும் என்ற நோக்கத்தில் அமைச்சர் செங்கோட்டையனிடம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இதை ஒரு கோரிக்கையாக வைத்தேன். அவரும் முதல் அமைச்சரிடம் கோரிக்கையைச் சேர்ப்பதாகக் கூறினார்.

முதல்வருக்கும் கோரிக்கை அனுப்பினோம். குழந்தைகளின் உடல்நலத்திற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்க கூடாது என்ற நோக்கில் அவர் இதற்கு அனுமதி அளித்ததுடன் இடமும் வழங்கி அடிக்கல் நாட்டியும் இருக்கிறார். இதற்காக தமிழக அரசுக்கும் முதல் அமைச்சருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’. இவ்வாறு திவ்யா சத்யராஜ் கூறினார்.