VZ துரை தயாரித்த Sci-Fi திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பிரபல நடிகர் கபீர் துகான் சிங்..!
முகவரி, தொட்டி ஜெயா, இருட்டு போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கிய VZ துரை, டாய்னா பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து Sci-Fi திரில்லர் படத்தை தயாரிக்கிறார்.
கடந்த 2017ஆம் ஆண்டு ‘ராடன் பிலிம் பெஸ்டிவெல்’ குறும்பட போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற சிறந்த குறும்படம் ‘அசரீரி’. அந்த படத்தை இயக்கிய ஜி.கே தொடர்ந்து ‘காதலின் தீபம் ஒன்று ‘ என்ற குறும்படத்தை இயக்கினார்.இது யூடியுபில் ஒரு மில்லியனுக்கு மேலான பார்வையாளர்களை கடந்து அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பெற்றது.
இந்த குழுவினரால் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் Sci-Fi திரில்லராக “டிஸ்டண்ட்” எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாக்கப்பட்டு விரைவில் வெளிவர இருக்கிறது. இதன் பர்ஸ்ட் லுக்கை பிரபல வில்லன் நடிகர் கபீர் துகான் சிங் தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
ஜீவி படத்தின் ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி அவர் கூறும்போது இந்த கதை தனக்கு மிகவும் சவாலாக இருந்ததாக தெரிவித்தார்.
படத்தின் நாயகனாக அறிமுக நாயகன் சுரேஷ் நல்லுசாமி நடிக்கிறார்.விஜய் டிவி ஆயுத எழுத்து தொடர் புகழ் சௌந்தர்யா நஞ்சுதன் இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார். விஜய் சித்தார்த்தா இசையமைக்கிறார்.
நடிகர்கள் : சுரேஷ் நல்லுசாமி, சௌந்தர்யா நஞ்சுதன், பிக் பிரிண்ட் கார்த்திக், ராதாகிருஷ்ணன், முத்துபாண்டியன்