Tamil Movie Ads News and Videos Portal

பிரபலங்களை லைவிற்கு இழுக்கும் இயக்குநர்

கொரானா பரவலை தடுக்க, அனைவரையும் வீட்டிலேயே இருக்க வலியுறுத்திய அரசின் உத்தரவை மதித்து பிரபலங்கள் முதல் சாமானியர் வரை வீட்டில் இருக்க, எழுத்தாளரும் இயக்குனருமான கேபிள் சங்கர் தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை இன்ஸ்டாகிராமில் ( Insta Id: cablesankar ) உள்ள இன்ஸ்டா லைவ்  மூலமாய் பிரபலங்களுடன் உரையாடி வருகிறார்.

நடிகை வினோதினி வைத்தியநாதன், லவ் குரு ராஜவேல், தயாரிப்பாளர் தனஞ்செயன், ஓ மை கடவுளே இயக்குனர் அஸ்வத், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, பாரம் இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி, எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், நடிகர் மனோபாலா, இயக்குனர் சீனு ராமசாமி என பல பேரிடம் உரையாடி வருகிறார்.

இந்த இன்ஸ்டா லைவிற்கு இணைய தள பார்வையாளர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. லைவ் நிகழ்ச்சியை அவரது யூ ட்யூப் சேனலிலும் வெளியிட்டு வருவதால் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள்.

லாக்டவுன் நேரத்தில் பிரபலங்களுடனான இந்த உரையாடல் மிகவும் உபயோகமானதாகவும், பொழுது போக்கவும் பயன் படுகிறது என்கிறார்கள் பார்வையாளர்கள்.

அனைவரும் என் நண்பர்கள். இந்த லாக்டவுன் நேரத்தில் அவர்களுடன் உரையாடுவது மனதிற்கு இனிமையாய் இருக்கிறது என்கிறார் இயக்குனர்  கேபிள் சங்கர்.