நல்ல கதை அம்சமுள்ள கமர்சியல் படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ரத்தினசிவா. சமீபத்தில் இவர் இயக்கிய சீறு படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அடுத்தப்படத்திற்கான வேலையில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். இந்தச் சமயத்தில் அவரை பற்றி யாரோ முகம் தெரியாத நபர் தவறான ஆடியோ பதிவு ஒன்றை வாட்ஸ் அப்பில் பரவ விட்டிருக்கிறார். அந்த ஆடியோவில்..இயக்குநர் ரத்தின சிவாவிடம் நடிகர் விஜய்சேதுபதியின் கால்ஷீட் இருப்பதாகவும்…அதனால் இன்வெஸ் பண்ண ஒரு தயாரிப்பாளர் தேவை என்றும் பேசியிருக்கிறது ஒரு குரல் .
இந்தச் செய்தி குறித்து இயக்குநர் ரத்தினசிவா கூறியதாவது, “இது முழுக்க முழுக்க தவறான செய்தி. நாங்கள் படம் செய்வதாக இருந்தால் அந்தச் செய்தி எங்கள் மூலமாகத் தானே வரும்? எங்களுக்கு சம்பந்தமில்லாதவர்கள் இப்படியொரு தவறான செய்தியை வெளியிடுகிறார்கள். அவர்களின் நோக்கம் என்னவென்றே தெரியவில்லை” என்றார்