தமிழ்நாட்டில் போலீஸ் படங்களை கொண்டாட வைத்தவர்களில் இயக்குநர் ஹரி மிக முக்கியமானவர். அவர் தற்போது சாத்தான்குளம் சம்பவம் குறித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
“சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக்கூடாது . அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே….
காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுதியுள்ளது. …
காவல் துறையை பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிக மிக வேதனைப்படுகிறேன்…!” என்று தெரிவித்துள்ளார்.
இவர் விக்ரம் நடித்த சாமி, சாமி2, சூர்யா நடித்த சிங்கம் 1,2 மற்றும் 3 ஆகிய காவல்துறையை உயர்த்தும் படங்களை இயக்கியவர்.