Tamil Movie Ads News and Videos Portal

பாரதிராஜாவை ஏற்றுக்கொள்ள மாட்டோம்” தயாரிப்பாளர் அதிரடி

- Advertisement -

கொரோனா பிரச்சனை ஒரு பக்கம் என்றால் தமிழ்த்திரைப்படத் “தயாரிப்பாளர் சங்கப் பிரச்சனை வேறோர் வடிவில் வளர்ந்து நிற்கிறது. இன்னொரு சங்கத்தை உண்டாக்கி பாரதிராஜா தனிக்கடை உருவாக்கியுள்ளார். இந்த நேரத்தில் கலைப்புலி தாணு பாரதிராஜா பழைய சங்கத்திற்கு வந்தால் அன்னப்போஸ்டா ஏற்றுக்கொள்கிறோம் என்று கொளுத்திப் போட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சிங்காரவேலன் சீறி இருக்கிறார். அதன் விபரம் வருமாறு,

” சங்கத்தில் 1351 பேர் வாக்களிக்கும் தகுதி படைத்தவர்கள் இருக்கிறார்கள்.

இந்த சங்கத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சரியான நிர்வாகிகள் தேர்வாகவில்லை.

இதனால் தயாரிப்பாளர்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது.

பாரதிராஜா கிட்டதட்ட 100 தயாரிப்பாளர்களுடன் புதிய சங்கம் ஆரம்பித்து இருக்கிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆலோசனை கூட்டத்தில் தாணு புகார் தெரிவித்தார்

ஆனால் பத்திரிகையாளர் சந்திப்பில் தாணு பேசும் போது, பாரதிராஜா மீண்டும் சங்கத்திற்கு வாருங்கள்… உங்களுக்கு அன்னபோஸ்ட்டாக தலைவர் பதவி கொடுக்கிறோம் என கூறியிருக்கிறார்.

தாணுவின் சொந்த கருத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே தொடர்ந்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் இணைந்து ஒரு அணியை உருவாக்கி இருக்கிறோம்.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் புதிய அணியாக களமிறங்க இருக்கிறோம்” என்றார் சிங்காரவேலன்.

- Advertisement -