‘நாச்சியார்’ படத்தைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் உருவான ‘ஆதித்யவர்மா’ படம் திருப்திகரமாக இல்லை என்று சொல்லி ஒதுக்கப்பட்ட நிலையில், அடுத்து பாலா தனது திறமையை நிருபிக்கும் விதமாக ஒரு வித்தியாசமான கதைக்களனில் நடிகர் சூர்யாவை இயக்கவிருக்கிறார் என்ற செய்தி வெளியானது. ஆனால் இன்று வரை அது செய்தியாகவே
தொடரும் நிலையில், மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தை தமிழில் பாலா ஸ்டூடியோஸ் சார்பில் ரீமேக் செய்யவிருக்கிறார் பாலா என்கிண்ற செய்தி வெளியாகியிருக்கிறது. தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக நடித்த ஆர்.கே.சுரேஷ் இப்படத்திற்காக தனது உடல் எடையை 96 கிலோவாக உயர்த்தியிருக்கிறார். இப்படம் மலையாளத்தில் வெளியான ஜோசப் படத்தின் ரீமேக் ஆகும். பத்மகுமார் இப்படத்தை இயக்கவிருக்கிறார்.