Tamil Movie Ads News and Videos Portal

‘இயக்குநர் – நடிகை’ உண்மைக்காதல் கதையில் அமலாபால்

‘சிந்துச்சமவெளி’ படத்தின் மூலம் அறிமுகமானாலும் ‘மைனா’ படத்தின் மூலம் தன் அடையாளத்தை மாற்றிக் கொண்டவர் நடிகை அமலா பால். அப்படத்தை தொடர்ந்து, ‘தலைவா’ ‘தெய்வத்திருமகள்’, வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில், ஆடை ஆகிய படங்களில் நடித்தார். தலைவா, தெய்வத் திருமகள் படங்களில் நடித்த போது அப்படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜயுடன் காதலில் விழுந்து அவரைத் திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டு பிரிந்தனர். தற்போது பிரபல இயக்குநருக்கும் நடிகைக்குமான காதல் கதை ஒன்று ஹிந்தியில் வெஃப் சீரிஸாக உருவாகவிருக்கிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் அமலாபால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தக் காதல் கதை பாலிவுட்டில் 1970 காலகட்டத்தில் இயக்குநராக இருந்த மகேஷ் பட் மற்றும் பர்வீன் பாபிக்கும் இடையே இருந்த உண்மையான காதலை அடிப்படையாகக் கொண்டு உருவாகவிருக்கிறது. மகேஷ்பட் இப்படத்தை தயாரிக்க, புஷ்தீப் ரத்வாஜ் இப்படத்தை இயக்கவிருக்கிறார்.