ஒரு வரிக்குள் இந்தப்படத்தின் கதையை அடக்கவே முடியாது. டைனோசர்ஸ் என்பது எப்படி புதிரோ அப்படித்தான் டைனோசர்ஸ் படத்தின் கதையும். நாயகன் மண்ணு-வுக்கு ஒரு கதை, துரைக்கு ஒரு கதை, சாலயார்-க்கு ஒரு கதை கிளியப்பனுக்கு ஒரு கதை, நாயகன் மண்ணுவின் அண்ணனுக்கு ஒரு கதை, நாயகி தீபாவுக்கு ஒரு கதை, மத்தியச் சிறையில் இருந்து வெளியான கைதி ஒரு கதை என படத்தில் நிறைய கதைகள் விரிகின்றன.
கிளியப்பன், சாலயார் என இரண்டு கேங்க்-கிற்கும் பகை என்பதை மட்டும் கொஞ்சம் ஸ்ட்ராங்கான கதையாகச் சொல்ல முடியும்!
படத்தில் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். வடசென்னை வாழ்வியலை தங்கள் உடல்மொழியில் கொண்டு வந்துள்ள அனைவருமே பாராட்டுதலுக்குரியவர்கள்.
.
“இளமையில 25 காலண்டர், முதுமையில 35 காலண்டர் அவ்ளோதான் சார் வாழ்க்கை, இந்தக் கத்திரிக்கோலை நேர்த்தியாப் பிடிச்சி துணி வெட்ட டைம் எடுக்கும், காசு கம்மியாத்தான் வரும், அதையே கத்தி மாதிரி பிடிச்சி இஷ்டத்துக்கு குத்துனேன்னு வை உசுரு போயி சுளுவா வேலை முடிஞ்சிரும், காசும் அதிகம், ஆனா ஜெயிலுக்குப் போகணும், தீபா காஃபி கொண்டு வாம்மான்னு சொன்னா என் புள்ள காஃபி கொண்டு வரும், அந்த அளவுக்காது ஒன்ன என் லைஃப்ல வச்சிக்குவேன், செஞ்சா செம்மையா செய்ங்க… இல்ல வூட்ல போயி சமையல் செய்ங்கடா, நா சாமி கும்பிட கோயிலுக்குப் போனதும் கெடையாது சம்பவம் பண்ணிட்டு ஜெயிலுக்குப் போனதும் கெடையாது, ஓ இவரு பரம்பரை ஹெல்பரா…?” என பல இடங்களில் வசனம் அட்டகாசமாக வந்திருக்கிறது.
ஆக்ஷன் ரத்தம் தெறிக்கும் பைட் சீக்வென்ஸ்களும் சிறப்போ சிறப்பு. ஆனால் ஒரு நல்ல படத்திற்கு மேக்கிங் மட்டுமே முக்கியமல்ல. அதைவிட முக்கியம் திரைக்கதை. அதை மட்டும் சரியாகச் செய்திருந்தால் டைனோசர்ஸ் நம்மை அதன் உலகத்திற்கு அழைத்திருக்கும். எனிவே புது முயற்சியைப் பாராட்டலாம்
2.5/5