லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘கைதி’ படத்தின் வெற்றி அதன் ரீமேக் உரிமைக்கான விலையை வெகுவாக உயர்த்தியிருக்கிறது. இதன் ரீமேக் உரிமையை கைப்பற்ற பல மொழிகளிலும் உள்ள முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஹிந்தியில் ‘கைதி’ படத்தின் ரீமேக்கை தமிழில் அப்படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் எஸ்.ஆர்.பிரபு ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஹிந்தி ரீமேக்கையும் கனகராஜ் தான் இயக்குவார் என்று கூறப்பட்டது. அவர் தற்போது விஜயை ‘மாஸ்டர்’ படத்தில் இயக்கி வருவதால் அப்படப்பிடிப்பை முடித்து விட்டு இப்படத்தை தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தில் டில்லி கதாபாத்திரத்தில் சல்மான்கான் நடிக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.. ஆனால் அது உறுதிபடுத்தப்படாத தகவல் என்று எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.