Tamil Movie Ads News and Videos Portal

இறங்கிவரும் திலீப்; இடம் கொடுப்பாரா மஞ்சு வாரியர்

- Advertisement -

மலையாளத் திரையுலகில் மிகப்பெரிய சலனத்தை எற்படுத்திய விவகாரம், நடிகை பாவனாவின் கடத்தல் விவகாரமாகும். அதில் தொடர்புடையவராக குற்றம்சாட்டப்பட்ட பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து மலையாளத் திரையுலகில் பெண் நடிகைகள் மற்றும் நாயகிகளுக்கு இருந்து வரும் பாலியல் தொல்லைகளை சமாளிக்க துணை நடிகைகள் மற்றும் சில நாயகிகள் இணைந்து சில அமைப்புகளைத் தொடங்கி அதன் மூலம் திலீப் போன்ற நடிகர்களை கடுமையாக சாடி வருகின்றனர். இந்நிலையில்

சிறையிலிருந்து விடுதலை ஆகியிருக்கும் திலீப், தனது முன்னாள் மனைவியான ‘மஞ்சுவாரியர்’ மற்றும் தனக்கு எதிராக போராடி வரும் பெண்கள் அமைப்பு என யார் மீதும் எனக்கு எந்தவித கோபமோ வருத்தமோ இல்லை. மஞ்சு வாரியருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு மீண்டும் வந்தால் நடிப்பேன் என்று கூறியிருந்தார். இது தொடர்பாக கருத்து ஏதும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார் மஞ்சுவாரியர். திலீப் காதல் திருமணம் செய்த மஞ்சு வாரியரை விவகாரத்து செய்து பிரிந்தப் பின்னர் நடிகை காவ்யா மாதவனை மறுமணம் செய்து கொண்டார். பின்னர் தான் பாவனா தொடர்பான பிரச்சனையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -

Get real time updates directly on you device, subscribe now.