கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ், ஸ்நேகா நடிப்பில் வெளியான ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் இடம் பெறும் கட்டிப்பிடி வைத்தியம் காட்சியானது மிகவும் பிரபலமானது. தற்போது டிவி தொகுப்பாளினியும் நடிகையும் ஆன டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷிணி கட்டிப்பிடி வைத்தியத்தை கையில் எடுத்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து அவர்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கிய திவ்யதர்ஷிணி அதில் ஒரு பெண்ணை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறியதாகவும், அவர் தன்னை மீண்டும் கட்டிப்பிடிக்க கலங்கிய கண்களுடன் கேட்டுக் கொண்டதாகவும், இதனையடுத்து, தான் அனைத்துப் பெண்களையும் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறியதாகவும் கூறியுள்ளார். மேலும் ஒருவரை நாம் கட்டிப் பிடிக்கும் போது, அவர் நம்மை இறுக கட்டி அணைத்துக் கொள்வது என்பது அன்பின் அலாதியான தருணம் என்றும் அதைத் தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளார்.