Tamil Movie Ads News and Videos Portal

தர்பாரை வீழ்த்தியதா சைக்கோ? சக்ஸஸ் மீட் கலவரம்

சென்றவாரம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பைப் பெற்றுள்ளது சைக்கோ. மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யாமேனன், அதிதிராவ் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தில் இளையராஜா இசை அமைத்திருந்தார்.

நேற்று இப்படத்தின் சக்ஸஸ் மீட் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அதில் ஒரு திரையரங்க உரிமையாளர், “சைக்கோ படம் தர்பார் படத்தை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது” என்றார். அந்த ஒரு வார்த்தை பலத்த விவாதத்தை கிளப்பியுள்ளது.