சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான முதல்படம் “ஆதித்ய வர்மா”. படம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே பல பிரச்சனைகளை சந்தித்து படம் ஒரு வழியாக வெளியானாலும் எதிர்பார்த்த வெற்றியை படம் பெறவில்லை. இருந்தாலும் ஆறுதலான விசயம் படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பு கவனிக்கப்பட்டது தான். இதனால் அடுத்த படத்திற்கான கதையினை தேர்வு செய்வதில் அப்பா மகன் இருவருமே கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.
தற்போது ஒரு பிரபல இயக்குநர் ஒருவர் கூறிய அப்பா-மகன் கதை விக்ரம்-துருவ் இருவரும் சேர்ந்து நடிப்பதற்கான கதைக்களமாகத் தெரிகிறதாம். இதனால் அடுத்த படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்கலாம் என்கின்ற முடிவிற்கு சீயான் வந்துவிட்டதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள். விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடித்து வரும் “கோப்ரா” படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இப்படத்தின் வேலைகள் தொடங்கலாம்.