ரஜினி நடித்த மாப்பிள்ளை படத்தை ரீமேக் செய்து நடித்த தனுஷ், வெகுநாளாக ‘நெற்றிக்கண்’ படத்தை ரீமேக் செய்து நடிக்க வேண்டும் என பல மேடைகளில் பேசி இருக்கிறார்.
இப்போது அதற்கான வேலையை தொடங்கி விட்டதாக அவரது வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ஆனால் இயக்குனர் யார் என்று முடிவு செய்யப்படவில்லை என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.
‘நெற்றிக்கண்’ திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா சுரேஷ் நடித்திருந்தார்.அந்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என தகவல் கசிகிறதாம்…!
நடந்தால் நல்லாதான் இருக்கும்?