நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமின்றி, பாடல் ஆசிரியராகவும், பாடகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் பன்முகத் திறமை கொண்டவர். இவர் இயக்கத்தில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் பவர்.பாண்டி என்ற படம் வெளியானது. இது இவர் இயக்கத்தில் வெளியான முதல் படம் ஆகும்.
இதில் ராஜ்கிரண், பிரசன்னா, ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை தற்போது ராஜ்கிரண் மற்றும் கவுண்டமணி இருவரையும் கொண்டு இயக்க தனுஷ் முயன்று வருவதாக தெரிகிறது. ஆனால் இப்படத்தில் நடிக்க கவுண்டமணி சம்மதம் தெரிவிப்பாரா..? என்கின்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாக அவர் படங்களில் நடிக்காமல் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.