‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் மிகச்சிறந்த இயக்குநராக தன்னைப் பதிவு செய்த இயக்குநர் மாரி செல்வராஜ் அடுத்ததாக தனது படத்தில் தனுஷை இயக்கவிருக்கிறார். ‘அசுரன்’ படத்தின் வெற்றியை அடுத்து தனுஷ் நடிக்கும் படம் என்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. பரியேறும் பெருமாள் திரைப்படத்தைப் போன்றே இப்படமும் திருநெல்வேலி வட்டாரத்தில் நடக்கும் கதை என்பதால் திருநெல்வேலி சீமைப்பகுதியை கதைக்களமாகக் கொண்டு இப்படம் உருவாகவிருக்கிறது
. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் நெல்லைப்பகுதியில் தொடங்கியிருக்கிறது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி ‘நட்ராஜ்’ நடிக்கவிருக்கிறார். தனுஷின் 41வது படமான இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாளத்தில் ‘அனுராககார்கின் வெல்லம்’ என்ற படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்ற ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், சந்தோஷ் நாராயணனின் ஒளிப்பதிவில் இப்படம் உருவாகவிருக்கிறது. மாரிசெல்வராஜ் பரியேறும் பெருமாள் வெற்றிக்குப் பிறகு இப்படத்தை அவரது சொந்த மாவட்டத்தில் எடுப்பதால் ரசிகர்கள் படப்பிடிப்பு நடத்தும் இடத்தில் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் அதையும் மீறி மாரிசெல்வராக் மேஜிக் செய்வார் என்று நம்பலாம்.