தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ‘ஜெகமே தந்திரம்’ படம் வரும் மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து தனுஷின் 43வது படத்தை ‘துருவங்கள் பதினாறு’ ‘நரகாசுரன்’ மற்றும் மாபியா ஆகியப் படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கவிருக்கிறார். சத்யஜோதி ப்லிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
இப்படத்திற்கான திரைக்கதையில் இரண்டு மலையாளக் கதாசிரியர்கள் பணியாற்ற இருக்கின்றனர். அவர்கள் சமீபத்தில் டெவினோ தாமஸ், பார்வதி நடிப்பில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற “வைரஸ்” மற்றும் பகத்பாசில் நடிப்பில் வெளியான ‘வரதன்’ ஆகிய படங்களின் கதாசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ”சுகாஷ் – ஷர்பு” என்னும் பெயர் கொண்ட இந்த இரட்டையர்கள் இப்படத்தின் கதையாக்கத்தில் இணைவதால் இப்படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.