முறுக்கு மீசை கெட்டப்பில் தனுஷ்
அசுரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தனுஷ் நடிப்பில் வெளியான “எனை நோக்கிப் பாயும் தோட்டா” படம் சரியாகப் போகவில்லை. இருப்பினும் அவருடைய அடுத்த படங்களான ‘பட்டாஸ்’ ‘சுருளி’ போன்ற படங்கள் ரீலீஷுக்கு தயாராகி வருகின்றன. இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படத்திற்கு தலைப்பு “சுருளி” என்று கூறப்பட்டாலும், இன்னும் அதிகாரப்பூர்வமாக அந்தத் தலைப்பு அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் அப்படத்தில் இடம் பெற்ற தனுஷின் கெட்டப் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தனது முந்தைய படமான ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு முறுக்கு மீசை வைத்ததைப் போல் இப்படத்தில் தனுஷ் கதாபாத்திரத்திற்கு முறுக்கு மீசை வைத்து அழகு பார்த்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இந்த கெட்டப்புக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.