தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். வடசென்னை, அசுரன் போன்ற சீரியஸான படங்களில் நடித்தாலும் அவ்வபோது, ‘மாரி’ ‘பட்டாஸ்’ போன்ற கமர்ஸியல் படங்களிலும் நடித்து வருகிறார். இதுவரை தனுஷ் த்ரில்லர் வகைத் திரைப்படங்களில் நடித்தது இல்லை. முதன்முறையாக இவர் த்ரில்லர் வகை திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார்.
‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் இப்படம் உருவாகவிருக்கிறது. சத்யஜோதி ப்லிம்ஸ் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. இதற்கு முன்னர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘தொடரி’ ‘பட்டாஸ்’ படங்களையும் சத்யஜோதி ப்லிம்ஸ் தான் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படத்தை த்ரில்லர் வகையில் எடுத்த கார்த்திக் நரேன், தனது இரண்டாவது படமான ‘நரகாசுரன்’ படத்தையும் அதே பாணியில் தான் எடுத்தார். ஆனால் படம் பொருளாதார சிக்கலால் இன்னும் வெளியாகவில்லை. பின்னர் அருண் விஜய் பிரசன்னா நடிப்பில் ‘மாபியா’ படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் வரும் பிப்ரவரி 21ல் வெளியாகவிருக்கிறது.