வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான தனுஷின் அசுரன் திரைப்படத்தில் தனுஷின் நடிப்பு அபரிமிதமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து அவர் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தாணு தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படம் நெல்லை மண் வாசத்தோடு உருவாகவிருக்கிறது. இப்படத்தில் தனுஷ் கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்கின்ற தகவல் வெளியாகவிருப்பதோடு, படத்தின் டைட்டிலும் அதே கர்ணன் தான் என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் வேறு இரு படங்களான ‘சுருளி’ மற்றும் ‘பட்டாஸ்’ ஆகியப் படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.