‘அசுரன்’ படத்தினைத் தொடர்ந்து தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்திருக்கும் ‘சுருளி’ திரைப்படம் ரீலிசுக்கு தயாராகி வருகிறது. மதுரை மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் இப்படத்தின் ஒட்டு மொத்த படப்பிடிப்பும் நடந்து முடிந்திருக்கிறது. ஆக்ஷன் படத்தில் விஷால் ஜோடியாக நடித்த ஐஸ்வர்யலட்சுமி இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்திருக்கும் நிலையில் படம் குறித்துப் பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ‘முறுக்கு மீசையுடன் கிராமத்து வேடத்தில் தனுஷ் கலக்கலாக நடித்திருக்கிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை உணர்ந்து அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் திருப்திபடுத்தும் விதமாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் பிப்ரவரி 19 அன்று வெளியாகும்..” என்று தெரிவித்துள்ளார்.