இசையமைப்பாளரும் பாடகருமான யுவன் சங்கர் ராஜா ஏற்கனவே சில படங்களைத் தயாரித்திருக்கிறார். தற்போது அவர் தன் தந்தையும் தமிழ் சினிமா இசையின் மகத்தான ஆளுமையுமான இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை சினிமாவாக எடுக்க முடிவு செய்திருக்கிறார். இதை
தானே தயாரித்து இயக்கவும் இருக்கிறார். இப்படத்திற்கு ‘ராஜா தி ஜர்னி’ என்று பெயர் சூட்டப்படலாம் என்று தெரிகிறது. மேலும் இளையராஜாவாக நடிப்பதற்கு நடிகர் தனுஷுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். அவர் சம்மதிக்கும் பட்சத்தில் படத்தின் வேலைகள் துரிதமாக தொடங்க வாய்ப்பிருக்கிறது.