தமிழ்த் திரைப்படங்கள் மட்டுமின்றி பாலிவுட்டையும் கடந்து ஹாலிவுட் வரைச் சென்று தனது நடிப்பின் மூலம் வெற்றிக்கொடி நாட்டியவர் நடிகர் தனுஷ். 2013ம் ஆண்டு இவர் நடித்த முதல் ஹிந்தித் திரைப்படமான “ராஞ்சனா” வெளியானது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அமிதாப்பச்சன் மற்றும் அக்சராஹாசனுடன் இணைந்து ‘ஷமிதாப்’ படத்தில் நடித்தார்.
இப்படம் எதிர்பார்த்த அளவிற்குப் போகவில்லை. இதனையடுத்து கடந்த 5 ஆண்டுகளாக ஹிந்திப் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த தனுஷ், தற்போது மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலப் பெண்ணுக்கும், தென்னிந்திய இளைஞனுக்கு இடையிலான காதல் கதையாக இத்திரைப்படம் உருவாகவிருக்கிறது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அக்ஷய்குமாருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.