டிசம்பர் 27ல் ”சைக்கோ”
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதிராவ், நித்யா மேனன் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் “சைக்கோ”. பிரபல இயக்குநர் ஆல்பிரட் ஹிட்ச்காக் இயக்கிய ஒரு மிக முக்கியமான திரைப்படமான “சைக்கோ” திரைப்படத்தின் தலைப்பை எடுத்துக் கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் வெளியீடு குறித்து அருள்மொழி மாணிக்கம் கூறியதாவது, “இப்படம் மிக அற்புதமான திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இதில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகருக்குமே இது முக்கியத்துவம் வாய்ந்த படமாக மாறியிருக்கிறது. மேலும் தற்போது இருக்கும் சூழலில் ஒரு நல்ல படத்தை மிகச் சரியான நேரத்தில் வெளியிட வேண்டியது அதி முக்கியமாகும். எனவே பல தேதிகளைப் பரிசீலித்து இறுதியாக டிசம்பர் 27ம் தேதி படத்தை வெளியிட மிகச் சரியான தேதியாகவிருக்கும் என்று தீர்மானித்திருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.