“டீம் வொர்க் எவ்ளோ முக்கியம் தெரியுமா?” என்ற டயலாக்-ஐ எல்லா சினிமா இயக்குநர்களும் சொல்வார்கள். டீமன் பட டீம் அந்த டீம் வொர்க்கைச் சரியாகச் செய்துள்ளதா?
பேய்படம் எடுக்க விரும்பும் ஒரு உதவி இயக்குநர் சச்சின். படத்தின் ஹீரோ அவர்தான். அவர் தயாரிப்பாளரிடம் கதை சொல்கிறார். அது ஒரு கதை! அந்தக் கதையைப் பற்றி டிஸ்கஸ் செய்வதற்காக ஒரு வீட்டுக்குச் செல்கிறார். அது ஒரு கதை. பின் அந்த வீட்டில் பேய் இருப்பதும், அந்தப் பேய்க்கு ஒரு கதை இருப்பதும் தனிக்கதை! இப்படி கதை கதையாக விரியும் இப்படத்தின் கதை ஒரு ரகம் என்றால் திரைக்கதை வேறோர் ரகம்
நடிகர் சச்சின் எதார்த்தமாக நடித்துள்ளார். மற்றவர்கள் எல்லாம் எதார்த்தம் என்றால் என்ன? என்று கேட்கும் விதத்தில் நடித்துள்ளனர்
பின்னணி இசை பெரிதாக வொர்க்கவுட் ஆகவில்லை. ஒளிப்பதிவாளர் அவரால் முடிந்த விஷுவலை வழங்கியுள்ளார்.
திரைக்கதையை மிகவும் மேம்போக்காக கையாண்டுள்ளார் படத்தின் இயக்குநர். நாம் ஏற்கனவே பார்த்துச் சலித்த டெம்ப்ளேட் காட்சிகளை சல்லடை கூட மாற்றாமல் அப்படியே சலித்துள்ளதால் டீமன் நம்மை ஹெவியாக டீல் செய்கிறது. புது முயற்சிகளை ஊக்குவிக்கலாம் என்றால் படத்தில் எதுவுமே புதுசாக இல்லை! பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ப்ரோஸ்!
2/5
-மு.ஜெகன் கவிராஜ்