ஒரு கடத்தல் சம்பந்தப்பட்ட கதையை மிக சாமர்த்தியமாக கடத்திச் சென்றிருக்கிறார் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன். தமிழகத்தின் டிஜிபியாக இருக்கிறார். மதுபாலா. அவரின் மகள் கடத்தப்படுகிறார். அவரைக் அண்டர் கவர் ஆபிசர் அருள்நிதி கண்டுபிடிக்க வேண்டும் என்பது ஆர்டர். அப்படி கண்டுபுடிக்கச் செல்லும் அருள்நிதியின் பயணத்தில் விரியும் திரைக்கதையே தேஜாவு
வழக்கம் போல் கதைதேர்வில் கவனமாக செயல்பட்டிருக்கிறார் அருள்நிதி. கதைக்கேற்ற நடிப்பும் அவருக்கு இயல்பாக வருகிறது. மதுபாலாவின் நடிப்பில் தான் சில குறைபாடுகள். அச்யத்குமார் நடிப்பும் பேசப்படும். காளிவெங்கட் கொடுத்த வேலைக்கு குறை வைக்கவில்லை
பி.ஜி முத்தையாவின் ஒளிப்பதிவு கதைக்கு தேவையான விஷுவலை சமரசம் இல்லாமல் கொடுக்கிறது. ஜிப்ரானின் பின்னணி இசை கதையில் இருக்கும் திரில்லருக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது
அதிக அழுத்தம் ஆடியன்ஸுக்கு அலுப்புத் தட்டும் என்பதால் படத்தில் சில விசயங்களை சிம்பிளாக டீல் செய்துள்ளார் இயக்குநர் அரவிந்த். க்ளைமாக்ஸ் ட்விஸ்டும் கேரக்டர்கள் ட்விஸ்டும் வேறலெவலில் அமைந்துள்ளது. கணிக்க முடியாத திருப்பங்கள் கொண்ட இப்படத்தை தாராளமாக பார்க்கலாம்
3.5/5
-மு.ஜெகன் கவிராஜ்