Tamil Movie Ads News and Videos Portal

1 மில்லியன் பார்வைகளை கடந்தது ‘தேஜாவு’ டீசர் !

அருள்நிதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தேஜாவு’. இப்படத்தின் டீசரை கடந்த 27ம் தேதி அருள்நிதியின் சகோதரரும், நடிகர்,  தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற  உறுப்பினருமான உதயநிதி  ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். வெளியான சில நிமிடங்களிலேயே இந்த டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. இதனை தொடர்ந்து திரையுலக பிரபலங்களும் ‘தேஜாவு’ படக்குழுவினரை பாராட்டியும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தும் டீசரை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் நேற்று ‘தேஜாவு’ டீசர் 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதன் மூலம் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கியிருக்கும் இப்படத்தில் மதுபாலா, அச்சுத குமார், ராகவ் விஜய், ஸ்ம்ருதி வெங்கட், மைம் கோபி, சேத்தன், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  PG முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கும்  இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, அருள் E சித்தார்த் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
வைட் கார்பெட் ஃபிலிம்ஸ் சார்பில் விஜய் பாண்டி தயாரித்துள்ள இப்படத்தினை PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இணைந்து தயாரித்துள்ளார்.