டிசம்பரில் வருகிறது ஜுமாஞ்சி
ஜுமான்ஜி என்கிற இந்தக் கற்பனை கதைக்களத்தின் அடிப்படை, ஒரு விளையாட்டினைப் பற்றியது. ஆட்டத்தின் போது காய் நகர்வுகளுக்கேற்ப கதைக்களமும் பல வித்தியாசமான விசித்திரமான நிகழ்வுகளுடன் நகரும். Chris Van Allsburg என்பவர் எழுதிய இந்தக் கதைக்களத்தின் அடித்தளமே மந்திரமும் மாயாஜாலமுமே! Chris எழுதிய 2 புத்தகங்களின் அடிப்படையில் இதுவரை 3 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. Jumanji (1995), Zathura: A Space Adventure (2005) மற்றும் Jumanji: Welcome to the Jungle (2017). அம்மூன்று படங்களுமே வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன. Jumanji, 1996 முதல் 1999 வரை ஒரு தொலைக்காட்சித் தொடரகவும் ஒளிபரப்பப்பட்டது! இப்போது இப்படத் தொடரின் நான்காவது தவணையாக, Jumanji: The Next Level உருவாக்கப்பட்டுள்ளது!
2017 ஆம் ஆண்டு வெளிவந்த படத்தில் இடம்பெற்றிருந்த அந்த 4 இளம் மாணவர்கள், அடுத்த கட்ட அதிரடி ஆக்ஷனுக்கு தற்சமயம் தயார் நிலைக்கு வந்துவிட்டார்கள்!
ஸ்பென்சரின் (அலெக் உல்ஃப்) நகர்வொன்றில், Jumanji விளையாட்டு புத்துணர்வுடன் துளிர் விட, இதர நண்பர்கள், பெத்தானி (மேடிசன் இஸ்மேன்), ஃப்ரிட்ஜ் (செர்டாருஸ் ப்ளெயின்) மற்றும் மார்த்தா (மார்கன் டர்னர்) ஆகியோர் ஸ்பென்சர் காணாமல் போய்விட்டதை உணர, ஸ்பென்சரின் தாத்தா எடி (டானி டி வோடோ) மற்றும் அவரது நண்பர் மிலோ வாக்கர் (டானி க்ளோவர்) ஆகிய இருவரும்கூட களத்தில் இறங்குகிறார்கள்! விளையாட்டின் புதிய பரிமாணங்களைப் புரிந்து கொண்டு அனைவரும் தத்தம் நகர்வுகளை நகர்த்திவிட முற்படுகிறார்கள். ஸ்பென்சரை மீட்டு வருவதில்லாமல், அவ்விளையாட்டிலிருந்து முழுமையாக விலகுவதே அவர்கள் அனைவரது இலக்கு! Dwayne Johnson (The Rock), புதைபொருள் ஆராய்ச்சியாளராகத் தோன்றுகிறார். Jack Blackக்கும் முக்கியதொரு வேடத்தில் தோன்றுகிறார்.
Jake Kasdan படத்தை இயக்கியுள்ளார். Henry Jackman இசையமைத்துள்ளார். Gyula Pados படத்தின் ஒளிப்பதிவாளர். படத்தொகுப்பு – Steve Edwards.