Tamil Movie Ads News and Videos Portal

இளையராஜாவின் இசைப்பயணத்தில் இருந்தவர் மரணம்

புருஷோத்தமன் இளையராஜாவின் இசைப் பயணத்தின் முதல் நான்கு படங்களைத் தவிர மற்ற எல்லாப் படங்களிலிருந்தும் அவருடைய பயணித்தவர் இசைஞானி இளையராஜாவின் இசைக்குறிப்புகளை மட்டுமல்ல அவரது முக குறிப்பையும் வைத்து என்ன சொல்ல வருகிறார் என்பதை தெரிந்துகொண்டு பணியாற்றக்கூடிய நுட்பமான இசைக்கலைஞர் புருஷோத்தமன் மிக நீண்ட பயணத்திற்கு இடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெறப் போவதாகச் சொல்லி இசைஞானியிடம் இருந்து விடைபெற்று சென்றார் புருஷோத்தமன் திருவான்மியூரில் இருக்கும் அவருடைய இல்லத்தில் தனது மனைவி இரண்டு மகன்கள் ஓடு வாழ்ந்து வந்தார் இந்நிலையில் அவருக்கு புற்றுநோய் என்பது தெரிந்து அதற்கு சிகிச்சை எடுத்து வந்தார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் மனைவி புற்றுநோயால் மறைந்து போனார் அதைத்தொடர்ந்து இன்று திடீரென்று புருஷோத்தமன் மறைந்து போனார் வைரஸ் பரவல் காரணமாக கட்டுப்பாடு மிகுந்த நேரத்தில் தனது தோளோடு தோள் நின்று பணியாற்றிவந்த இசைக்கலைஞர் புருஷோத்தமன் மறைவு செய்தி கேட்ட இசைஞானி இளையராஜா அவர்கள் தனது சகாக்களிடம் மாலை கொடுத்து அனுப்பி தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார் புருஷோத்தமன் மறைவு தமிழகத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான இசைக்கலைஞர்களை அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது